Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார் மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபராக தமிழரே வேண்டும் :வி.எஸ்.சிவகரன்

In இலங்கை
Updated: 15:25 GMT, Mar 19, 2018 | Published: 15:24 GMT, Mar 19, 2018 |
0 Comments
1167
This post was written by : poovannan

தற்போது கடமையில் இருக்கின்ற அரசாங்க அதிபர், அமைச்சின் செயலாளராக இடமாற்றம் செய்யப்படவுள்ள நிலையில், அடுத்து தமிழர் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார்.

குறித்த நியமனம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவிற்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அக்கடிதத்தில், “99 வீதம் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட மன்னார் மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட உள்ளவர் தமிழராக இருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் இருந்த சிங்கள அரசாங்க அதிபர் சாமானிய மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல் சர்வாதிகாரியாகவே நிர்வாகம் நடத்தியவர். மீண்டும் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்படவுள்ளமையை அறிகின்றோம்.

சிங்கள மயமாக்கல் சிந்தனையை தயவு செய்து நடை முறைப்படுத்தாதீர்கள். ஆகவே மன்னார் மாவட்ட மக்களின் விருப்பிற்கு மாறாக செயற்பட மாட்டீர்கள் என நம்புகின்றோம்” எனத் தெரிவித்தார்.

குறித்த கடிதத்தின் பிரதிகள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆகியொருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg