Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய உள்ளூராட்சிமன்றங்களை அமைப்பதற்கான பணிகள் நாளை ஆரம்பம்!

In இலங்கை
Updated: 16:17 GMT, Mar 19, 2018 | Published: 16:17 GMT, Mar 19, 2018 |
0 Comments
1072
This post was written by : Vithushagan

உள்ளூட்சிமன்ற நிறுவனங்களை அமைக்கும் பணி நாளை முதல் ஆரம்பமாகும் என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூட்சி அமைச்சின் செயலாளர் கமல்பத்மஸ்ரீ தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களை அமைப்பதற்கு தேவையான ஆலோசனைகள் உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு வழங்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஏதேனும் ஒரு கட்சிக்கு பெரும்பாண்மையை பெற்றுக்கொள்ள முடியாத உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாத்தை நிலைநிறுத்தும் முறை குறித்தும் அமைச்சின் செயலாளர் தெளிவுபடுத்தினார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

24 மாவட்டங்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் வர்த்தமானியில் முழுமையாக வெளியிடுவதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தல் மூலம் மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களும் தெரிவாகியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg