Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்த நாட்டு மக்கள் இனவாதத்தினை விரும்பாதவர்களாக இருக்கவேண்டும்: வியாழேந்திரன்

In இலங்கை
Updated: 17:43 GMT, Mar 19, 2018 | Published: 17:32 GMT, Mar 19, 2018 |
0 Comments
1076
This post was written by : Vithushagan

நாங்கள் அனைவரும் இலங்கை தாயின் பிள்ளைகள் என்ற அடிப்படையில் இனவாதத்தினையும் மதவாத்தினையும் மறந்து செல்லவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசப்கல்லூரியின் 143வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரி தினம் இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”இனவாதத்தினால் மதவாதத்தினால் ஏற்பட்ட அழிவுகள் எங்களை இன்று சர்வதேசம் வரையில் கொண்டுசென்றுள்ளது.நிலைமாறுகால சூழலில் இந்த நாட்டில் மக்கள் தடுமாறுகின்றார்கள்,அரசாங்கம் தடுமாறுகின்றது,சர்வதேசம் தடுமாறுகின்றது.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு இழப்பினை,அழிவினை சந்திக்ககூடாது. நாங்கள் அனைவரும் இலங்கை தாயின் மக்கள் என்ற அடிப்படையில் இனவாதத்தினையும் மதவாத்தினையும் மறந்து செல்லவேண்டும்.இதனையே அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசெல்லவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg