மும்பை அணியிலிருந்து பெரேன்டர்ஃப் நீக்கம்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இந்த ஆண்டிற்கான போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் மும்பை அணிக்காக விளையாடவிருந்த ஜேசன் பெரேன்டர்ஃப் நீக்கப்பட்டு, மிட்செல் மெக்லேனகன் (Mitchell McClenaghan) சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் மும்பை அணி அவுஸ்ரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெரேன்டர்ஃப் ஐ 1.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருந்த நிலையில் இவர் தற்போது முதுகு வலியால் அவதிப்பட்டு வருகின்றார்.
இதனால் இவருக்குப்பதிலாக நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மெக்லேனகன் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு ஐ.பி.எல். தொடரின் தொழில்நுட்பக் குழு அனுமதி வழங்கியுள்ளது.