Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெய்லருக்கு பதிலாக மார்டின் குப்டில்

In கிாிக்கட்
Updated: 07:34 GMT, Mar 20, 2018 | Published: 04:33 GMT, Mar 20, 2018 |
0 Comments
1154
This post was written by : Velauthapillai Kapilan

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியில் ரோஸ் டெய்லருக்கு பதிலாக மார்டின் குப்டில் இணைக்கப்படுவாரென தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி ஒக்லாந்தில் நடைபெற்று வருகின்றது. 5 ஆட்டங்கள்  கொண்ட குறித்த ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரின் முதலாவது போட்டி, ஒக்லாந்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில் நியூசிலாந்து அணியில் அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரரான மார்டின் குப்டில் சேர்க்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒருநாள் போட்டியில் காயமடைந்த ரோஸ் டெய்லர் உடல் தகுதியை நிரூபிக்கத் தவறினால், அதனை சமாளிக்கும் நோக்கில் மார்டின் குப்டில் சேர்க்கப்படுவாரென தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg