Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கழிவுப்பொருள் எரிக்கும் நிலையம் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டல்

In இலங்கை
Updated: 08:23 GMT, Mar 20, 2018 | Published: 05:49 GMT, Mar 20, 2018 |
0 Comments
1064
This post was written by : poovannan

மட்டக்களப்பு – திராய்மடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுப்பொருள் எரிக்கும் நிலையம் தொடர்பாக அப்பகுதி பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .

இக்கலந்துரையாடல் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் கூறுகையில், “குறித்த கழிவு பொருட்களை எரிக்கும் நிலையத்தில் உள்ள இயந்திரங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை. இயந்திரங்களை முறையாக கையாளும்போது இவ்வாறான நிலையை கட்டுப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக வைத்திய அதிகாரிகள் கூறுகையில், “கழிவுப் பொருட்கள் எரிக்கும் நிலையத்தில் ஏரிக்கப்படுகின்ற பொருட்கள் தொடர்பாக இப்பகுதி மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் கிராம அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மூவர் உட்பட கிராமசேவை உத்தியோகத்தருக்கும் நிலையத்தினை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படுவதுடன் இவ்விடயம் தொடர்பாக மீள் பரிசீலனை செய்து அறிக்கைகள் சமர்பிக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் இப்ரா லெப்பை தலைமையிலான வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள், திராய்மடு சுவிஸ் கிராமம், பனிச்சையடி, கொக்குவில் ஆகிய கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் எஸ்.கோகுலன், பிரதேச சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர் கே.லோகராஜா, பிராந்திய சுகாதார பணிமனை வைத்திய அதிகாரி வைத்தியர் கிரேஸ், நவரட்ணராஜா, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன் மற்றும் மாநகர பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அகற்றப்படுகின்ற கழிவுப்பொருட்கள் மற்றும் இறந்த மனித உடலங்களின் கழிவுகள் இங்கு எரிக்கப்படுகின்றன. இதனால் வெளியாகும் புகை மற்றும் துர்நாற்றம் என்பவற்றால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவித்து பல எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg