Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தரவரிசையில் முன்னேறிய அவுஸ்ரேலியா

In கிாிக்கட்
Updated: 08:09 GMT, Mar 20, 2018 | Published: 05:26 GMT, Mar 20, 2018 |
0 Comments
1308
This post was written by : Velauthapillai Kapilan

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் சம்பியன்ஷிப் தொடரைக் கைப்பற்றிய அவுஸ்ரேலிய பெண்கள் அணி, ஐ.சி.சி (ICC) ஒருநாள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை எதிர்கொண்டு அவுஸ்ரேலியா பெண்கள் கிரிக்கெட் அணி கடந்த (ஞாயிற்றுக்கிழமை) 3வது ஒருநாள் போட்டியில் விளையாடியது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 332 ஓட்டங்களை எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 235 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

இந்த ஒருநாள் தொடரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஐ.சி.சி. (ICC) ஒருநாள் தரவரிசையில் அவுஸ்ரேலிய பெண்கள் அணி மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

அதுமாத்திரமின்றி இதற்கு முன்னர் நடந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்த அவுஸ்ரேலிய பெண்கள் அணி, முதல் இரண்டு ஒருநாள் சம்பியன்ஷிப் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒருநாள் தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி இந்தியா, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான T-20 முத்தரப்பு தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg