Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாய்ந்தமருதில் பொழுதுபோக்கு நிலையம் அமைக்க ஏற்பாடு

In இலங்கை
Updated: 06:34 GMT, Mar 20, 2018 | Published: 06:34 GMT, Mar 20, 2018 |
0 Comments
1056
This post was written by : poovannan

சாய்ந்தமருது – பொலிவேரியன் புதிய நகரில் பொழுதுபோக்கு ஓய்வு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு காணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதில் அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் பிரதேச கிளைச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம், சங்கத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற பிரதேச கல்விப் பணிப்பாளருமான எம்.ஐ.அப்துல் ஜப்பார் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு உதவுமாறு கோரி மேர்ஸி லங்கா நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்டப் பணிப்பாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேர்ஸி லங்கா நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் என்.எம்.ஏ.முஜீப் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார், சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், ஓய்வூதிய விடயத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முஜீபா, அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் அம்பாறை மாவட்ட சங்க உப தலைவர் ஏ.எல்.எம்.பஷீர், செயலாளர் ஏ.எல்.எம்.அமீன், டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல், பொறியியலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றினர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg