Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் அமுலுக்கு வருகிறது மற்றுமொரு புதிய வரி முறை!

In இலங்கை
Updated: 06:18 GMT, Mar 20, 2018 | Published: 06:18 GMT, Mar 20, 2018 |
0 Comments
1351
This post was written by : Risha

புதிய வரி முறையின் மூலம் நாட்டின் வியாபார சூழலை ஊக்குவிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய உள்நாட்டு வருவாய் சட்டம் குறித்து நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பொது விழிப்புணர்வு கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகாரம் பெற்ற புதிய உள்நாட்டு வருவாய் சட்டமானது, முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் நிதியமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

புதிய வருவாய் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக நிதியமைச்சரின் ஆதரவில் நேற்றைய கருத்தரங்கு இடம்பெற்றிருந்தது.

மறைமுக வரிகளை குறைப்பதன் மூலம் மக்கள் மீதான சுமையை குறைப்பதற்கு இந்த புதிய சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg