Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவிடம் உதவிக்கரம் நீட்டிய தமிழ் பிரதிநிதிகள்!

In இலங்கை
Updated: 09:44 GMT, Mar 20, 2018 | Published: 06:57 GMT, Mar 20, 2018 |
0 Comments
1314
This post was written by : Risha

ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்குமாறு தமிழ் பிரதிநிதிகள் அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளன.

ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சென்றுள்ள தமிழ் பிரதிநிதிகள், ஐ.நா.விற்கான அமெரிக்க துதுவரை நேற்று (திங்கட்கிழமை) நியூயோர்க்கில் சந்தித்த போதே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை, ஐ.நா. தீர்மானங்களை இலங்கை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகளை ஆராயுமாறும் அவர்கள் அமெரிக்காவை கோரினர்.

நியூயோர்க்கிலிருந்து வொஷிங்டனுக்கு பயணிக்கும் தூதுக்குழுவினர் அங்கு தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி இhஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

குறித்த தமிழ் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தூதுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், கனேடிய தமிழ் காங்கிரஸ், அமெரிக்க தமிழர் செயலணி, உலக தமிழர் பேரவை ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்கியுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் நாளை நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தில் இவர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg