Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டசபையிலிருந்து தி.மு.க.வினர் வெளியேற்றம்! – சபாநாயகர் அதிரடி

In இந்தியா
Updated: 08:38 GMT, Mar 20, 2018 | Published: 07:03 GMT, Mar 20, 2018 |
0 Comments
1064
This post was written by : Kemasiya

ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடர்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த விளக்கவுரையை ஏற்க மறுத்து அமளியில் ஈடுபட்ட தி.மு.க.வினர் சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்றாவது நாளாக கூடிய தமிழக சட்டசபை கூட்டத்திலிருந்தே சபாநாயகரின் உத்தரவின் பேரில் இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ராம ராஜ்ஜியம் அமைப்பதற்கு ஆதரவு திரட்டும் வகையில் ‘விஸ்வ இந்து பரிஷத்’ என்னும் அமைப்பினர் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கக் கூடாதென எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, முதல்வர் அரசு சார்புடைய விளக்கத்தை முன்வைத்திருந்தார். அவரின் கருத்தை ஏற்க மறுத்த தி.மு.க.வினர் சபையை குழப்பும் வகையில் அமளியில் ஈடுபட்டனர்.

இதன்போது அமைதியை பேணுமாறு கோரியும் அவர்கள் தொடர் கூச்சல் எழுப்பியதால், அவர்களை வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டதற்கு அமைவாக, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட அக் கட்சியை சேர்ந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg