Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசி ஆதாயம் தேடுகிறார்கள்: தமிழக முதல்வர்

In இந்தியா
Updated: 08:44 GMT, Mar 20, 2018 | Published: 07:18 GMT, Mar 20, 2018 |
0 Comments
1096
This post was written by : Kemasiya

ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசி ஆதாயம் தேடப் பார்ப்பது சரியல்ல என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) கூடிய தமிழக சட்டசபைக் கூட்டத்தில், குறித்த யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சியினருக்கு வழங்கிய விளக்கவுரையில் முதல்வர் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர்:-

“ராம ராஜ்ஜிய ரத யாத்திரை ஐந்து மாநிலங்களில் மேற்கொள்ளப்படுகின்றது. அங்கெல்லாம் அமளியில்லாத போது தமிழகத்தில் மாத்திரம் இவ்வாறு அமைதியை கெடுப்பது ஏன்?

இந்த யாத்திரையினால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இடம்பெறக் கூடாது என்பதற்காகவே பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு எந்தவொரு மாநிலத்திலும் அனைத்து மதத்தவர்களுக்கும் சம உரிமை உள்ளது. இவ்வாறான சிறு விடயங்களை ஊதிப் பெரிதுபடுத்துவதனூடாக சிலர் அரசியல் ஆதாயம் தேட முனைகின்றனர்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg