Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரண்டு வாகனங்களை மோதித் தள்ளிய அமைச்சரின் உறவினருக்கு விளக்கமறியல்!

In இலங்கை
Updated: 07:17 GMT, Mar 20, 2018 | Published: 07:17 GMT, Mar 20, 2018 |
0 Comments
1232
This post was written by : Risha

தலவத்துகொட பகுதியில் இரண்டு கார்களை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தியவன்னா ஓயாவில் பாய்ந்து விபத்திற்குள்ளாகிய சொகுசு காரின் உரிமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் நேற்று தலங்கம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சான கபீர் ஹசீமின் மகன் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், விபத்தை ஏற்படுத்தியவர் தனது மகன் இல்லை என்றும் அவர் தனது தூரத்து உறவினர் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், எவ்வாறாயினும் குறித்த நபருக்கும் தனது அரசியல் செயற்பாடுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg