இலங்கை மகளிர் அணிக்கு 251 ஓட்டங்கள் இலக்கு

இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தம்புளை ரங்கிரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளீர் அணி 6 விக்கெட்டினை இழந்து 250 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து 251 எனும் வெற்றியிலக்கை நோக்கி இலங்கை மகளிர் அணி துடுப்பெடுத்தாடவுள்ள நிலையில் இத் தொடருக்கு சமரி அத்தபத்து தலைமை தாங்குகிறார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடராக இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றுவரும் இப்போட்டியில் முன்னாள் அணித்தலைவி சசிகலா சிறிவர்தன மற்றும் இனோகா ரணவீரவும் ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த போட்டித்தொடரானது 3 ஒருநாள் போட்டிகளையும், மூன்று 20 க்கு 20 போட்டிகளும் கொண்டதா அமைந்துள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி ஒருநாள் போட்டிகள் நிறைவடையவுள்ள நிலையில், 20 க்கு 20 போட்டிகள் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானம் மற்றும் என்.சி.சி ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.