Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார் சசிகலா (2 ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 07:38 GMT, Mar 20, 2018 | Published: 07:38 GMT, Mar 20, 2018 |
0 Comments
1269
This post was written by : Kemasiya

தனது கணவர் நடராஜனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா அனுமதியோடு தஞ்சை நோக்கி காரில் சென்றுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உயிரிழந்த நடராஜனின் இறுதிச்சடங்கு, அவருடைய சொந்த ஊரான தஞ்சையில் உள்ள வீட்டில் இடம்பெறவுள்ள நிலையில் சசிகலா அங்கு புறப்பட்டுள்ளார்.

சசிகலாவிற்கு 10நாட்கள் பிணை வழங்க கோரி இன்று காலை அவரின் சட்டத்தரணி சிறைத்துறை அதிகாரிகளிடம் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவை விசாரித்த சிறைத்துறை அதிகாரிகளில் அவருக்கு 15நாட்கள் பிணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சசிகலாவை பிணையில் விடுவிக்க சிறைத்துறை சம்மதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை 15 நாட்கள் பிணையில் விடுவிக்க பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது.

கணவன் நடராஜனின் இறுதிக்கிரியையில் பங்கேற்பதற்காக பிணைகோரி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சசிகலா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவை விசாரித்த சிறைத்துறை நிர்வாக அதிகாரிகள், சசிகலா செல்லும் இடங்கள், தங்குமிடம் உள்ளிட்ட விடயங்களை எழுத்து மூலம் உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர்  பிணை வழங்க அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் சசிகலா சிறையில் இருந்து வெளியேறி, கணவரின் சொந்த ஊரான தஞ்சைக்கு நேரடியாக செல்லவுள்ளதாக சிறை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg