Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முஹமட் ஷமி மீதான குற்றச்சாட்டு: பி.சி.சி.ஐ. விளக்கம்

In கிாிக்கட்
Updated: 11:43 GMT, Mar 20, 2018 | Published: 09:40 GMT, Mar 20, 2018 |
0 Comments
1051
This post was written by : Velauthapillai Kapilan

இந்திய அணிவீரர் முஹமட் ஷமி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் ஷமி இரண்டு நாட்கள் துபாயில் தங்கியிருந்ததாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

ஷமி மீது முன்வைக்கப்பட்ட ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு (Match Fixing) மற்றும் அவரது மனைவி ஹாசின் ஜகான் கொடுத்த குடும்ப வன்முறை முறைப்பாடுகள் குறித்து விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில் இவ்விடயம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப் பயணத்தில் ஷமி இடம்பெற்றமை உள்ளிட்ட தகவல்களை ஒப்படைக்குமாறு பி.சி.சி.ஐயிடம் பொலிஸார் கோரியிருந்தனர்.

அதனை தொடர்ந்து பி.சி.சி.ஐ. பொலிஸாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஷமி இரண்டு நாட்கள் துபாயில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஷமியின் மனைவி ஜகானால் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் பெண்ணான அலிஷ்பா (Alishba) தனக்கும் முகமது ஷமிக்கும் ஆட்ட நிர்ணயம் உள்ளிட்ட எந்தவிதத் தொடர்புகளும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg