Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்து மதத்தை எதிர்க்கிறார் ஸ்டாலின்! – தமிழிசை

In இந்தியா
Updated: 11:34 GMT, Mar 20, 2018 | Published: 10:28 GMT, Mar 20, 2018 |
0 Comments
1120
This post was written by : Kemasiya

இந்து மதம் சார்ந்த எந்த நடவடிக்கைகளும் தமிழகத்தில் இருக்க கூடாது என்ற ஸ்டாலினின் கொள்கை குறித்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“தமிழகத்தில் இனி நேர்மறையான அரசியல் வரவேண்டும். எதிர்மறையான அரசியலுக்கு இடமில்லை. யாத்திரைக்கு எதிராக வேண்டுமென்றே போராடி கைதாகுபவர்களை என்ன செய்வது?

பா.ஜ.க.வின் ஆட்சியில் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களைப் பற்றிக் கேட்டால், நாம் பட்டியலிடுவோம்.

ஆனால் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. இணைந்து ஆட்சி செய்த காலத்தில் மக்களுக்கு என்ன செய்தார்கள் என வினவினால் ஸ்டாலினால் பட்டியலிட முடியாது” என தமிழிசை தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg