Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக அமெரிக்காவில் பாடல் வெளியீடு

In
Updated: 10:35 GMT, Mar 20, 2018 | Published: 10:35 GMT, Mar 20, 2018 |
0 Comments
1146
This post was written by : Elakkiya

அமெரிக்காவின் புகழ் பெற்ற இரு இசை கலைஞர்கள் இணைந்து பாடல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர்.

துப்பாக்கி கலாசாரத்தில் இருந்து விடுபட்டு பாதுகாப்பான வாழ்வினை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு வலியுறுத்தி  இப்பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

“ஹமில்டன்” இசையமைப்பாளர் லின்-மானுவல் மிராண்டா மற்றும் பிரபல இசைக்கலைஞர் Ben Plat ஆகியோர் இணைந்து இந்த இசையினை உருவாக்கியிருக்கின்றனர்.

துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிரான அணிதிரள்வினை உறுதிப்படுத்தும் வகையிலும், சட்டம் ஒழுங்கு மற்றும் துப்பாக்கி உரிமை தொடர்பான நடவடிக்கைகளை பலப்படுத்த   சட்ட வல்லுனர்களையும் அரசியல்வாதிகளையும் வலியுறுத்தும்  வகையிலும் இந்த பாடலின் மையக் கருத்து அமைந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பான அணிதிரள்வை Marjory Stoneman Duglas உயர்நிலை பள்ளியின் மாணவர்கள் எதிர்வரும் 24ம் திகதி அமெரிக்காவின் வொஷிங்டன்  உட்பட பல பகுதிகளிலும் ஏற்பாடு செய்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் கடந்த மாதம் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக வந்திருக்கும் இப்பாடலானது you Tube சமூக வலைத்தளத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட காணொளிகள் வரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg