Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய நீதிமன்றங்கள் குறித்த பீதியில் ராஜபக்ஷேக்கள்!- அசாத் சாலி

In இலங்கை
Updated: 11:10 GMT, Mar 20, 2018 | Published: 11:10 GMT, Mar 20, 2018 |
0 Comments
1103
This post was written by : Risha

புதிய உயர் நீதிமன்றங்கள் நிறுவப்படின் சிறைக்கு செல்ல வேண்டும் என்ற பீதியிலேயே அதனை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மிகவும் சிக்கலான நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை துரித கதியில் விசாரிப்பதற்காக மூன்று உயர் நீதிமன்றங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் உயர் நீதிமன்றங்களை ஸ்தாபிப்பதற்கு எதிராக கூட்டு எதிரணி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமது களவுகள் வெளிப்படுத்தப்பட்டுவிடும் என்ற அச்சமே அவர்களின் இந்த செயற்பாட்டிற்கு காரணம். ஏனெனில், இந்த நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்படின் மூன்று, நான்கு மாதங்களுக்குள் இவர்கள் அனைவரும் சிறைக்கு செல்ல வேண்டி நேரிடும்.

எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் உடனடியாக மூன்று உயர் நீதிமன்றங்களையும் ஸ்தாபித்து அடுத்த நாடாளுமன்ற அல்லது ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இவர்கள் அனைவரும் சிறைக்குள் தளப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg