Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்முறையால் பாதிக்கப்பட்ட மதஸ்தலங்கள் புனரமைக்கப்படும்: அகில விராஜ்!

In இலங்கை
Updated: 11:33 GMT, Mar 20, 2018 | Published: 11:33 GMT, Mar 20, 2018 |
0 Comments
1080
This post was written by : Ravivarman

அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளில் பாதிக்கப்பட்ட மதவழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய கலாசார நிதியத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘குறித்த பகுதிகளில் பாதிப்புக்குள்ளான மதவழிபாட்டுத்தலங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றைத் தயாரித்து புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரஷாந்த் குணவர்தன தலைமையிலான குழுவொன்று கண்டி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மதஸ்தலங்கள் தொடர்பில் அடிப்படை ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.

அதேவேளை, புனரமைப்புப் பணிகளுக்குத் தேவையான நிதி மற்றும் தொழிநுட்ப தேவைகளையும் மத்திய கலாச்சார நிதியத்தின் ஊடாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg