Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிரணியை மௌனிக்கச் செய்ய புதிய முயற்சியில் அரசாங்கம்: ஜி.எல்.

In இலங்கை
Updated: 11:44 GMT, Mar 20, 2018 | Published: 11:44 GMT, Mar 20, 2018 |
0 Comments
1100
This post was written by : Risha

மக்களுக்கு ஆதரவான அரசியல்வாதிகளை சிறைக்குள் தள்ளி, எதிரணியை மௌனிக்கச் செய்யும் வகையிலேயே விசேட உயர் நீதிமன்றங்களை ஸ்தாபிக்க அரசாங்கம் முயல்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், ”விசேட உயர் நீதிமன்றங்களை ஸ்தாபிக்கும் அரசாங்கத்தின் முயற்சியானது திருடர்களை பிடிக்கும் திட்டமல்ல. நாட்டை ஊழலற்ற நாடாக மாற்றுவதற்கோ அல்லது சிறந்த அரசியல் கலாசாரத்தை ஸ்தாபிப்பதற்கான முயற்சியோ இல்லை. மாறாக மக்களுக்கு ஆதரவான அரசியல்வாதிகளை சிறைக்கு தள்ளும் முயற்சியே இது.

மேலும், இதன்மூலம் ராஜபக்ஷேக்களினதும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர்களதும் குடியுரிமையையும் நீக்கி, அரசியல் அரங்கிலிருந்து அவர்களை வெளியேற்றும் முயற்சியே தற்போது ஆரம்பமாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg