Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் மத்தியில் சிக்கி தவிக்கும் அப்பாவி சிரியர்கள்

In உலகம்
Updated: 03:48 GMT, Mar 21, 2018 | Published: 03:48 GMT, Mar 21, 2018 |
0 Comments
1089
This post was written by : Risha

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிரிய தலைநகர் டமஸ்கஸின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களினால் நடத்தப்பட்ட ரொக்கெட் ஷெல் தாக்குதலில் சுமார் 35 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள சனநெருக்கடிமிக்க சந்தைப் பகுதியை இலக்குவைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்களின் முற்றுகைக்கு உட்பட் கிழக்கு கௌட்டா பிராந்தியத்திலிருந்து ரொக்கெட்களை ஏவி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்களினால் சிரிய தலைநகரில் கட்டவிழ்த்துவிடப்பட்ட மிகக் கொடூர தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, தலைநகரின் மேற்கு பகுதியில் நேற்று இடம்பெற்ற பிறிதொரு மோட்டார் ஷெல் தாக்குதலில் மேலும் நால்வர் உயரிழந்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்களின் கோட்டையாக திகழும் கிழக்கு கௌட்டா பிராந்தியத்திற்குள் சிரிய இராணுவம் முன்னேறி வருகின்ற நிலையில், கிளர்ச்சியாளர்களின் இக்கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது.

கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கான சிரிய இராணுவத்தின் முயற்சியின் போதான தீவிர தாக்குதலில் சுமார் ஆயிரத்து 400 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக நம்பப்படுவதுடன், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சொந்த இடங்களைவிட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg