Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி!

In கிாிக்கட்
Updated: 04:11 GMT, Mar 21, 2018 | Published: 04:11 GMT, Mar 21, 2018 |
0 Comments
1140
This post was written by : Puvanes

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்றிக்கான போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணியை, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

சிம்பாபேயில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த குறித்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு இராச்சியம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணி 177 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷைமன் அன்வர் அதிகபட்சமாக 64 ஓட்டங்களைக் குவித்தார்.

178 ஓட்டங்களை இழக்காகக் கொண்டு பதிலுக்கு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டவீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

ஒரு கட்டத்தில் 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் நிலைதடுமாறியது. இருந்தபோதும் அந்த அணியின் குல்பதின் நயீப் நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

நயீப் 74 ஓட்டங்களையும், ஜர்ஹான் 63 ஓட்டங்களையும் குவிக்க ஆப்கானிஸ்தான் 34.3 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட 178 என்ற இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg