Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோட்டாபய வழிநடத்திய குழுவே சகோதரனைக் கடத்தியது – ஐ.நா.வில் ஜயனி

In இலங்கை
Updated: 08:40 GMT, Mar 21, 2018 | Published: 04:37 GMT, Mar 21, 2018 |
0 Comments
1300
This post was written by : Litharsan

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிநடத்தலில் இயங்கிய குழுவொன்றே தனது சகோதரன் உட்பட 11 பேரைக் கடத்தியதாக ஜயனி தியாகராஜா என்பவர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தார்.

ஜெனீவாவில் நடைபெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான உரையாடல் நேரத்தில் இலங்கை தொடர்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “நான் எனது சகோதரன் ஜெகன் தியாகராஜாவுக்காக நீதி கேட்டு இந்த சபைக்கு வந்திருக்கின்றேன். 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17  ஆம் திகதி இலங்கை கடற்படையின் அதிகாரி சம்பத் முனசிங்கவினால் எனது சகோதரர் கடத்தப்பட்டார்.

எனது சகோதரனை மீளப்பெறுவதற்காக அனைத்து விதமான இராஜதந்திர பொறிமுறைகளையும் எனது குடும்பம் பயன்படுத்தியது. ஆனால் இராணுவ ரீதியான சித்திரவதைகளையே எதிர்கொண்டோம்.

எங்களது தனிப்பட்ட நிதி நிலைமை காரணமாக சகோதரனை மீளப்பெறுவதற்காக ஒரு மில்லியன் கப்பம் கொடுத்தோம். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. துப்பாக்கி முனையில் பணத்தை பெற்றுக்கொண்டு எனது தாயை தள்ளிவிட்டு சென்றனர்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய வசந்த கருணாகொட, சம்பந் முனசிங்க, ஹெட்டிராய்ச்சி, தசநாயக்க உள்ளிட்டவர்களே எனது சகோதரன் உள்ளிட்ட 11 பேரை கடத்தினர்” என்று குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg