Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய நாடாளுமன்றில் இலங்கைக்கு அழுத்தம்!

In இலங்கை
Updated: 06:09 GMT, Mar 21, 2018 | Published: 06:09 GMT, Mar 21, 2018 |
0 Comments
1240
This post was written by : Litharsan

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதாக அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென பிரித்தானிய நாடாளுமன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமர்வில் இலங்கை தொடர்பாக விவாதிக்கப்பட்ட போதே நாடாளுமன்ற உறுப்பினர்களால் குறித்த விடயம் முன்வைக்கப்பட்டது.

இதன்போது, இலங்கை அரசாங்கம் பரிந்துரைகளை தடைகளின்றி நடைமுறைப்படுத்த கால வரையறையொன்றை அறிவிக்க வேண்டுமென தெரிவித்தனர்.

அத்துடன் வரலாற்று ரீதியாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். எதிர்வரும் காலத்திலும் இவ்வாறான மனித உரிமை மீறல்கள் இடம்பெறக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டனர்.

மேலும் குறித்த விடயங்களில் இலங்கை அரசாங்கம் வேகமாக தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நெருங்கிய பங்காளியாக இருந்து தொடர்ந்தும் ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்குவோம் என்று அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg