Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தடையை தாண்டி களம் இறங்கும் முக்கிய வீரர்! – தடுமாறும் அவுஸ்ரேலியா

In கிாிக்கட்
Updated: 06:46 GMT, Mar 21, 2018 | Published: 06:46 GMT, Mar 21, 2018 |
0 Comments
1315
This post was written by : Puvanes

அவுஸ்ரேலியா எதிர் தென்னாபிரிக்கா அணிகள் மோதிக்கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவின் முன்னணி வீரர் ரபாடா விளையாடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரபாடா மீது ஐ.சி.சி. நடத்தை விதி மீறல் குற்றச்சாட்டு சுமத்தியது.

போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் அவுஸ்ரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் ரபாடாவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து மைதானத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த ஸ்மித்தின் தோள்பட்டையில் ரபாடா இடித்ததாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த விடயம் நடத்தை விதிமீறல் என்ற நிலையில், ஐ.சி.சி ரபாடாவிற்கு தகுதி இழப்புக்காக மூன்று புள்ளிகளை வழங்கியது. ஏற்கனவே அவர் 5 தகுதி இழப்பு புள்ளிகளைப் பெற்று இருந்ததால் 2 டெஸ்ட் போட்டிகளில் தடை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ரபாடா மேல்முறையீடு செய்திருந்தார். அதனடிப்படையில் விசாரணைகள் மேற்கொண்டு ஐ.சி.சி அவருக்கு இறுதியாக வழங்கப்பட்ட 3 தகுதி இழப்பு புள்ளிகள் 1 தகுதி இழப்பு புள்ளியாக குறைத்தது.

இதன்காரணமாக அவுஸ்ரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரபாடா விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் முக்கிய வீரராக உள்ள ரபாடா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் தென்னாபிரிக்க அணி மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, அந்த அணி தற்போது பலம் வாய்ந்த அணியாக மாறியுள்ளது.

குறித்த அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய ரபாடா தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு பாரிய பங்களிப்பினைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அவுஸ்ரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் காயம் காரணமாக தென்னாபிரிக்க அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் என்பதால் அவுஸ்ரேலியா முக்கிய வீரரை இழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg