Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல் தொடரில் திடீர் மாற்றம்! – அட்டவணையிலும் திருத்தம்

In கிாிக்கட்
Updated: 07:20 GMT, Mar 21, 2018 | Published: 07:20 GMT, Mar 21, 2018 |
0 Comments
1691
This post was written by : Puvanes

எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சொந்த மைதானங்களில் நடக்கவிருந்த போட்டிகளின் அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் சொந்த மைதானங்களான மொகாலியில் 4 போட்டிகளும், இந்தூரில் 3 போட்டிகளும் இடம்பெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. அதிலும் கடைசி நான்கு போட்டிகள் மொகாலியில் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பஞ்சாப் – சண்டிகர் விமான நிலையம் சீர்திருத்தப்பணிகளுக்காக ஏப்ரல் 12 முதல், 31 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதனால், பஞ்சாப்பில் நடத்தவிருந்த போட்டிகள் முன்கூட்டியே நடத்த தீர்மானிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஐ.பி.எல் போட்டி அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மொகாலியில் ஏப்ரல் 8 ஆம் திகதி டெல்லி டேர்டெவில்ஸ் அணியையும், ஏப்ரல் 15 ஆம் திகதி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியையும், 19ஆம் திகதி ஐதராபாத் அணியையும் பஞ்சாப் எதிர்கொள்ளவுள்ளது.

மேலும், இந்தூரில் மே 4ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் அணியையும், மே 6ஆம் திகதி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியையும், மே 12ஆம் திகதி கொல்கத்தா அணியையும், மே 14ஆம் திகதி பெங்களூர் ரோயல் செலேஞ்சர்ஸ் அணியுடனும் பஞ்சாப் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg