Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடராஜன் குறித்து மனம் திறந்தார் திருமாவளவன்

In இந்தியா
Updated: 10:15 GMT, Mar 21, 2018 | Published: 10:09 GMT, Mar 21, 2018 |
0 Comments
1148
This post was written by : Kemasiya

மதவெறியுடையவர்களை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்ற கருத்துடையவரே புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியர் நடராஜன் என, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் நடராஜனின் பூதவுடலுக்கு இன்று (புதன்கிழமை) அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகங்கள் மத்தியில் கருத்துரைத்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறிய திருமாவளவன்,

“தமிழக அரசு மதவாதிகளையும், சாதிய வாதிகளையும் ஊக்குவித்து வருகின்றது என்ற கருத்துடன் நடராஜன் உடன்பாடுடையவர். அவர் முன்பு ஒருமுறை சிகிச்சைப் பெற்று திரும்பிய போது நான்  நேரில் சென்று பார்த்தேன்.

அப்போது என்னுடன் உரையாடிய அவர், மதவாதிகளை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசு அவ்வாறானவர்களையே ஆதரித்து வருகின்றது. குறித்த செயற்பாடுகள் தமிழகத்தின் அமைதியை சீர்குழைத்துவிடும் எனக் கூறினார்” என குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg