Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத மின்னிணைப்பால் ஒருவர் உயிரிழப்பு

In
Updated: 10:15 GMT, Mar 21, 2018 | Published: 10:13 GMT, Mar 21, 2018 |
0 Comments
1111
This post was written by : poovannan

மட்டக்களப்பு – கண்ணபுரம் பகுதியில் ஒருவர் மின்சாரம் தாக்கி இன்று (புதன்கிழமை) அதிகாலை உயிரிழந்துள்ளதாக உஹன பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தங்கராசா மகேஸ்வரன் (31 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கால்நடைகளை மேய்த்து வருவதற்காக கிராமத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோணகல எனும் பகுதிக்கு சென்ற நிலையில், சட்டவிரோதமாக வேலிகளில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரத்தினால் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வேலிகளில் சட்டவிரோதமான முறையில் மின்னிணைப்பு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவ தொடர்பாக உஹன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg