Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரவை பகலாக்கி களம் காணும் முக்கிய போட்டி! – வெற்றி யாருக்கு?

In கிாிக்கட்
Updated: 09:40 GMT, Mar 21, 2018 | Published: 09:40 GMT, Mar 21, 2018 |
0 Comments
1094
This post was written by : Puvanes

இங்கிலாந்து எதிர் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் முதலாவது பகல் – இரவு டெஸ்ட் போட்டி நாளை (வியாழக்கிழமை) ஆக்லாந்தில் ஆரம்பமாகின்றது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 3-2 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இந்தநிலையில் நியூசிலாந்தில் நடைபெறும் முதலாவது பகல் – இரவு ஆட்டத்தில் இரு அணிகளும் மோதிக்கொள்கின்றன. நியூசிலாந்து ஏற்கனவே அவுஸ்ரேலியாவிடம் மோதிய அறிமுக பகல் -இரவு போட்டியில் அவுஸ்ரேலியாவிடம் தோல்வியடைந்தது.

அதன்படி நியூசிலாந்து அணிக்கு இது இரண்டாவது பகல் இரவு ஆட்டமாகும். மறுபக்கம் இங்கிலாந்து அணிக்கு இது மூன்றாவது பகல் இரவு போட்டியாகும். ஏற்கனவே அவுஸ்ரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இங்கிலாந்து பகல் இரவு போட்டியில் மோதியுள்ளது.

இதுவரையில் மொத்தமாக 8 பகல் – இரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் அவுஸ்ரேலியா 4 போட்டிகளில் வெற்றியும், . பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் தலா ஒரு வெற்றியையும் பெற்றுள்ளன.

இந்த நிலையில் இங்கிலாந்து எதிர் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் பகல் – இரவு போட்டிக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg