Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டமைப்பை பிளவுபடுத்த வேண்டாம்: ஸ்ரீநேசன் கோரிக்கை

In இலங்கை
Updated: 11:50 GMT, Mar 21, 2018 | Published: 11:00 GMT, Mar 21, 2018 |
0 Comments
1107
This post was written by : poovannan

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்தும் வகையில் செயற்படக் கூடாதென்றும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், தங்களுக்கு வாக்களித்தவர்களையும் வாக்களிக்காதவர்களையும் திருப்திப்படுத்தி எங்களது ஆதரவாளர்களாக மாற்றியமைக்க வேண்டும்.

உறுப்பினர்களின் நிதிசார்ந்த செயற்பாடுகள் முறையாக இருக்க வேண்டும். மக்கள் உறுப்பினர்களைத் தெரிவு செய்துவிட்டார்கள். ஆகையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பலவீனப்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், கட்சியின் கொள்கைகளுக்கு அமைவாக எடுக்கின்ற முடிவுகளில் உறுப்பினர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

காலதாமதமான வேட்பாளர் தெரிவும் முதல்தர நிலையில் தகுதி உள்ளவர் இருந்தும், தங்களுடைய விருப்பு வெறுப்புகளுக்கமைய ஏனையவர்களை சிபார்சு செய்தமை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த தேர்தலில் சில இடங்களில் பின்னடைவு ஏற்படக் காரணமானது” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg