Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாத்திரையை ஸ்டாலினே பிரபலப்படுத்தினார்: ஜெயக்குமார்

In இந்தியா
Updated: 11:57 GMT, Mar 21, 2018 | Published: 10:36 GMT, Mar 21, 2018 |
0 Comments
1103
This post was written by : Kemasiya

ராம ராஜ்ஜிய ரத யாத்திரையை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரே பிரபலப்படுத்தினார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினம்பாக்கத்தில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சாதாரணமாக சென்ற ரத யாத்திரையை யாரும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் இவ்வளவு பிரபலமடைந்திருக்காது.

தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்க முயற்சிப்பவர்களுக்கு, சட்ட ஒழுங்கை சீர்கெடுக்க நினைப்பவர்களுக்கு, அம்மாவின் அரசு சிம்ம சொப்பனமாவே திகழும்” என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg