Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கு ஐ.நா. கடும் எச்சரிக்கை விடுக்கும் – சுமந்திரன்

In இலங்கை
Updated: 10:33 GMT, Mar 21, 2018 | Published: 10:33 GMT, Mar 21, 2018 |
0 Comments
1125
This post was written by : Litharsan

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கைக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் சென்றுள்ள சுமந்திரனுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான மாரி யாவஷிடா ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

அந்த சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் சுமந்திரன் தெரிவிக்கையில், “எமது முதலாவது கூட்டத்தில் ஐ.நா சபையின் உதவிப் பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் அவருடன் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான மாரி யாவசிடா ஆகிய இருவரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.

இப்போதும் இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமாக எந்தவித நகர்விலும் ஈடுபடவில்லை. குறிப்பாக பொறுப்புக்கூறல் விடயத்தில் இருந்து விலகுகின்ற தன்மையினை தொடர்ந்து வெளிப்படுத்திவரும் காரணத்தினால் நாளை நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சில கடுமையான முடிவுகளை சர்வதேச சமூகம் எடுத்தாக வேண்டும் என்பதை மிகவும் திடமாக வலியுறுத்தினோம்.

இதன்போது அவர்கள், “இது நாடுகளுடைய பேரவை, ஆகவே நாடுகள் தான் அதற்கான தீர்மானங்களை எடுக்க வேண்டும். எனினும் தங்களுடைய பங்களிப்பை தாம் சரியாக செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்”

அதேவேளை அமெரிக்காவின் ஐ.நா.வுக்கான தூதரகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் நாம் உதவித் தூதுவரை கேலி கரியைச் சந்தித்தோம். ஆகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் விடுகின்ற அறிக்கையைத் தொடர்ந்து ஒவ்வொரு நாடும் தமது நிலைபாட்டை முன்வைக்கும். அதை அமெரிக்கா முன்னின்று வலியுறுத்த வேண்டும் என்றும் உயரிஸ்தானிகரின் புதிய யோசனைகளை அமெரிக்கா வரவேற்க வேண்டும் என்பதையும் நாங்கள் கேட்டுக்கொண்டோம். அதற்கு அவர் சாதகமான பதிலைக் கொடுத்திருந்தார்” எனக் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg