Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரணிலுக்கு மஹிந்த ஆதரவு?

In இலங்கை
Updated: 10:40 GMT, Mar 21, 2018 | Published: 10:39 GMT, Mar 21, 2018 |
0 Comments
2265
This post was written by : Risha

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் குறித்த நிகழ்வில் மஹிந்த பங்கேற்றுள்ளார்.

பிரதமருக்கு எதிரான பிரேரணையில் நான்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டை முன்னோக்கிக்கொண்டு செல்ல முடியாது. அதனால் நாடு ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாங்கத்திடமிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்து பிரதமருக்கு எதிரான பிரேரணையில் அதி தீவிரம் காட்டிவந்த மஹிந்த பிரேரணையில் கையெழுத்திடாதமை ரணிலுக்கு மஹிந்த ஆதரவளிக்கின்றாரா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

இதேவேளை, பிரதமருக்கு எதிரான பிரேரணையில் கையெழுத்திடுவது குறித்து கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மஹிந்தவிடம் கேள்வி எழுப்பியிருந்த போதிலும், இறுதிவரை உறுதியான பதில்கள் எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg