Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன்னுமோர் மஹிந்தவாக உருவாக முடியாது: ராஜித

In இலங்கை
Updated: 11:06 GMT, Mar 21, 2018 | Published: 11:06 GMT, Mar 21, 2018 |
0 Comments
1350
This post was written by : Puvanes

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போன்று பௌத்தம் – சிங்களம் என்ற முறையில் சர்ச்சைகளுடன் கூடிய அரசியலை எம்மால் செய்ய முடியாது என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ஷவைப் போன்று அரசியலில் ஈடுபட எம்மால் முடியாது. அவருடைய அரசியல் பாதை வித்தியாசமானது நாம் செய்யும் அரசியல் வித்தியாசமானது. அவரைப் போன்ற அரசியலில் எம்மால் ஈடுபட முடியாது.

குறிப்பாக இன்னொரு மஹிந்தவாக எம்மால் மாற முடியாது. நாம் நாட்டுக்காக சேவை செய்யவே வந்துள்ளோம் அதற்காகவே மக்கள் வாக்குகளையும் தந்துள்ளார். மஹிந்தவை நாம் தோற்கடித்தது அவரைப் போன்று அரசியல் கொள்கைகளை பின்பற்றாமல் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தவிடயம் பலருக்கு மறந்து விட்டது. அவ்வாறானவர்கள் மஹிந்தவின் செயற்பாடுகளை நினைவில் வைத்துக் கொண்டு அதனைப் போன்று நாமும் அரசியலில் ஈடுபட வேண்டும் என நினைக்கின்றார்கள். இதனாலேயே பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார்கள்.

நாங்கள் மக்களுக்காக நல்லாட்சியை ஏற்படுத்தினோம். மக்களின் சுதந்திரத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டு வந்தோம். அதனால் எமக்கு பாதகமே ஏற்பட்ட போதும் நாட்டுக்காகவே இவற்றினைச் செய்து வருகின்றோம் எனவும் ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg