Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு!

In இலங்கை
Updated: 11:30 GMT, Mar 21, 2018 | Published: 11:30 GMT, Mar 21, 2018 |
0 Comments
1045
This post was written by : Ravivarman

வவுனியாவில் 154வது பொலிஸ் வீரர்கள் தினம் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபக்தி தென்னகோன் தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

வவுனியா, வன்னிப் பிராந்திய பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இன்று காலை 8.00 மணிக்கு மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேசத்திற்காக மரணத்த பொலிஸாரினை நினைவுகூறும் இந்நிகழ்வில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.எஸ் தென்னக்கோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிரி பெர்னான்டோ, பொலிஸ் ஆட்சேர்ப்பு உதவியாளர் மல்லவகே, பொலிஸ் கண்காணிப்பாளர் வெல்கம, கணக்காளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அவர்களுடன், வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வவுனியாவிலுள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உயிர்நீத்த பொலிஸாரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள், மற்றும் சமயத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg