Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கு காத்திருக்கும் புதிய நெருக்கடிகள்!

In இலங்கை
Updated: 14:50 GMT, Mar 21, 2018 | Published: 13:11 GMT, Mar 21, 2018 |
0 Comments
1485
This post was written by : Varshini

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, ஐ.நா. சபையின் துறைசார் நிபுணர்கள் மற்றும் ராஜதந்திரிகளுடன் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், அதன் மூலம் இலங்கைக்கு மேலும் அழுத்தம் கொடுக்கப்படுமென எதிர்பார்ப்பதாக நம்பிக்கை வெளியிட்டார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இன்று (புதன்கிழமை) இலங்கை தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது. இந்நிலையில், குறித்த அமர்வில் இலங்கைக்கு வலுவான அழுத்தம் கொடுக்கப்படுமென எதிர்பார்ப்பதாக எமது ஆதவன் செய்திச் சேவைக்கு சிறிதரன் தெரிவித்தார்.

அவ்வாறு அழுத்தம் கொடுக்கத் தவறினால், இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதாக உறுதியளித்த விடயங்கள் நடைபெறாமல் போகும் ஆபத்து உண்டென அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மைய காலமாக இலங்கையில் நடந்தேறும் விடங்கள் ஏமாற்றுச் செயல்கள் என்றும், சர்வதேச சமூகம் மட்டுமன்றி ஐ.நா. ஆணையாளரும் இதனை புரிந்துகொண்டுள்ளாரென சிறிதரன் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg