Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்ற வேண்டும் : சந்திரகுமார்!

In இலங்கை
Updated: 15:24 GMT, Mar 21, 2018 | Published: 15:24 GMT, Mar 21, 2018 |
0 Comments
1057
This post was written by : Ravivarman

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எப்பொழுதும் மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தாபகர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) உள்ளூராட்சி தேர்தலில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பாக தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மக்கள் முன் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

‘எமது மக்கள் ஆற்றலும் துணிச்சலும் சிறந்த பண்பாட்டு ஒழுக்கம் உள்ளவர்கள். அர்ப்பணிப்பில் தலைசிறந்தவர்கள். மக்களின் விடுதலைக்காக, மக்களின் நல்வாழ்வுக்காக தங்கள் உயிரையே அர்ப்பணித்தவர்களைக் கொண்ட மண்ணும் சமூகமும் எமதாகும்.

ஆகவே அந்த வழியில் நாம் மக்கள் நலனுக்காகவும் எமது மண்ணின் உயர்வுக்காகவும் எம்மை அர்ப்பணித்துச் செயற்படுவோம். எமது வளர்ச்சியும் ஆற்றல் வெளிப்பாடுமே எமது இனத்தின் விடுதலையைச் சாத்தியமாக்கும்.

மக்களால் மக்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட எமது அமைப்பின் சார்பான உள்ளுராட்சி மன்றஉறுப்பினர்கள் மக்கள் முன்னிலையில் உறுதியுரை எடுத்திருக்கிறார்கள்.

மக்கள் பிரதிநிதிகள், மக்களுக்கான பணிகளை எப்போதும் மக்களின் முன்னிலையிலேயே செயற்படுத்த வேண்டியவர்கள். மக்களின் தேவைகளை, மக்கள் நலனை, மக்களின் விருப்பம், மக்களுடைய ஆலோசனை, மக்களின் அவதானிப்பு, மக்களின் பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையிலே செய்ய வேண்டும்.

தாங்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்? அதை எப்படிச் செய்கிறார்கள் என்பதை மக்கள்அறிய வேண்டும். அரசியலிலும் நிர்வாகங்களிலும் என்ன நடக்கிறது? எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? என்னென்ன திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன? என்ன திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதையெல்லாம் மக்களுக்குவெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

அப்படிச் செய்யும்போது தவறுகளோ குறைபாடுகளோ நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறையும். ஊழலும் பாரபட்சமும் ஏற்படாது. வெளிப்படைத்தன்மை இல்லாமல் இரகசியமாக எதையும் செய்யும்போதே ஊழலும் பாரபட்சமும் குறைபாடுகளும் நிகழ்கின்றன’ என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg