Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பான் அரசாங்கத்தினால் தீயணைப்பு வாகனங்கள் அன்பளிப்பு!

In இலங்கை
Updated: 15:28 GMT, Mar 21, 2018 | Published: 15:28 GMT, Mar 21, 2018 |
0 Comments
1077
This post was written by : Ravivarman

ஏற்றுமதி உற்பத்தி வலயத்திற்கு ஜப்பான் அரசாங்கத்தினால் 8 தீயணைப்பு வாகனங்கள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பான உடன்படிக்கை இலங்கை முதலீட்டு சபையின் தலைமை அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றது.

இதன்போது இலங்கையிலுள்ள ஜப்பானுக்கான தூதுவர் கெனிச்சி சுகனுமா மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் துமிந்த ஆரியசிங்க ஆகியோர் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இலங்கை முதலீட்டு சபைக்குட்பட்ட 8 ஏற்றுமதி தயாரிப்பு வலயத்திற்காக 8 தீயணைப்பு வாகனங்களை பெற்றுக்கொள்வதற்காக 90778 அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்க ஜப்பான் அரசாங்கம் உடன்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg