Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈஸ்டர் விடுமுறை நாட்களில் மீண்டும் கடும்குளிர்

In
Updated: 16:15 GMT, Mar 21, 2018 | Published: 15:42 GMT, Mar 21, 2018 |
0 Comments
1364
This post was written by : S.K.Guna

பிரித்தானியாவில் இளவேனிற்காலம் நேற்று முதல் ஆரம்பித்துள்ளபோதிலும் கடுமையான குளிர் தொடர்வது மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டுகளில் இந்த நாட்களில் மரங்களில் இலைகள் துளிர்த்து பூக்கள் பூத்துக்குலுங்கி  காணப்பட்டன.  ஆனால் இம்முறை மரங்களில் பூக்கள் பூக்கவில்லை. மாறாக கடுமையான குளிருடன் கூடிய பனிப்பொழிவே ஏற்பட்டது.

இதற்கு காரணம் சைபீரியாவில் நிலவிவரும் மிகக்கடுமையான குளிரினால் அங்கிருந்து கிளர்ந்து மேலெழுந்துவரும் குளிரான காற்றினால் பிரித்தானியாவின் வானிலை உறைநிலைக்குச் சென்றது.

மேலும் மார்ச் முதலாம் திகதி முதல் பிரித்தானியாவை மிகக் கடுமையாகத் தாக்கியிருந்த கடுமையான குளிருடன்கூடிய பனிப்பொழிவை Beast from the East என வானிலை நிலையம் வர்ணித்திருந்தது.

மீண்டும் கடந்த வெள்ளி, சனி,ஞாயிறு, திங்கள் கிழமைகளில் லண்டன் உட்பட பல பிராந்தியங்களிலும் வெப்பநிலை -7c ஆக பதிவாகியிருந்ததுடன் பனிப்பொழிவும் ஏற்பட்டிருந்தது. இந்தநிலைமை Beast from the East 2.0 என்று  அழைக்கப்பட்டது.

இப்போது,  எதிர்வரும்   ஈஸ்டர் விடுமுறை நாட்களில் கடுமையானகுளிர் பிரித்தானிய மக்களை வாட்டியெடுக்குமென வானிலை அறிவிப்புக்கள் அச்சுறுத்துகின்றன.

முன்னெப்போதுமில்லாத வகையில் இவ்வாண்டு நிலவும் இந்த வானிலையை beast from the east 3 செய்தி ஊடகங்கள் வர்ணித்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg