Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை விடயத்தில் உலகளாவிய நியாயாதிக்கத்தை பரிசீலிக்குமாறு சர்வதேசத்திடம் கோரியுள்ள ஐநா ஆணையாளர் அறிக்கை

In இலங்கை
Updated: 16:58 GMT, Mar 21, 2018 | Published: 16:23 GMT, Mar 21, 2018 |
0 Comments
1303
This post was written by : Arun Arokianathan

ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்த ஒருவருட காலப்பகுதிக்குள் இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்பதில் தாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை எனவும் இதன் காரணமாக உலகளாவிய நியாயாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐநா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் மிக மெதுவான முன்னேற்றத்தைக் காண்ப்பது தொடர்பில் கவலைகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.  நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் காண்பிக்கப்படுகின்றமை தொடர்பில் ஆழ்ந்த கவலைகளை வெளியிட்டுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் காணாமல் போனோர் அலுவலகத்தை ஸ்தாபித்து நடைமுறைப்படுத்த  20 மாதங்களை எடுத்துக்கொண்டமை தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ளரர்.

இலங்கை தொடர்பாக ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற்பட்ட தீர்மானம் தொடர்பான வாய்மூல அறிக்கை சமர்பிக்கும் நிகழ்வில் இன்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் ராட் ஹுசைன் பங்கேற்கவில்லை.  சார்பாக வாய்மூல அறிக்கையை ஐநா மனித உரிமைகள் பேரவையின் உதவி ஆணையாளர் ஒக்ஸ் ட்ரொயிட்ஸ் டெல் கோமே சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

​.​

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg