Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் நூதன திருட்டு: இருவர் கைது

In இலங்கை
Updated: 07:14 GMT, Mar 22, 2018 | Published: 03:33 GMT, Mar 22, 2018 |
0 Comments
1056
This post was written by : Varatharajan Yuganthini

வவுனியா பகுதியில் பணம் மற்றும் தொலைப்பேசிகளை திருடி வந்த சந்தேகநபர் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (புதன்கிழமை) இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா- சாந்தசோலை, அண்ணாநகர் பகுதிகளை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களிடமிருந்து 15 தொலைபேசிகள், 30,000 ரூபாய் பணம், 2 சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் வங்கி அட்டைகள் என்பனவற்றை மீட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் வவுனியாவின் முக்கிய பகுதிகளான வைத்தியசாலை, நீதிமன்றம், பாடசாலைகள் போன்ற இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை உடைத்து பணம், தொலைபேசிகள் போன்றனவற்றை திருடிய குற்ற சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக, வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும், இன்று (திங்கட்கிழமை) வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg