Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோனியில் பல்கலைக்கழகத்தில் நான் மாணவன்: தினேஷ் கார்த்திக்

In கிாிக்கட்
Updated: 03:32 GMT, Mar 22, 2018 | Published: 03:32 GMT, Mar 22, 2018 |
0 Comments
1095
This post was written by : Puvanes

தோனியுடன் தன்னை ஒப்பிடுவது முறையல்ல எனவும், அவர் முதன்மையாக உள்ள பல்கலைக்கழகத்தில் இப்போதே தான் படித்து வருவதாகவும்  இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற சுதந்திரக்கிண்ண தொடரின் வெற்றிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், இப்போதே எனது பயணத்தை ஆரம்பித்துள்ளேன் எனக் குறிப்பிட்ட அவர், தோனியின் பயணம் முற்றிலும் வேறுபட்டது. பங்களாதேஷ் அணியுடனான போட்டி எனது உத்வேகத்தினை அளித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தோனியிடம் இருந்து எப்போதும் நான் கற்று கொண்டிருக்கிறேன் எனச் சுட்டிஎக்காட்டிய கார்த்திக், அவர் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதோடு உதவிகளையும் செய்துவருகின்றார். அவரின் வெற்றிப் பாதையில் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலனாகவே இப்போது வரும் பாராட்டுகளை உணர்கின்றேன் எனக் கூறிய கார்த்திக், இதுவரையிலும் நான் செய்த நல்ல விடயங்களே சுதந்திரக்கிண்ண இறுதிப்போட்டியில் பந்து சிக்ஸர் நோக்கிச் செல்வதற்கு உதவி செய்தது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg