Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டோக்லாமில் சீனாவின் ஆதிக்கம் குறித்து பிரதமர் ஏன் பேசவில்லை? – ராகுல்

In இந்தியா
Updated: 04:45 GMT, Mar 22, 2018 | Published: 04:07 GMT, Mar 22, 2018 |
0 Comments
1067
This post was written by : Kemasiya

டோக்லாம் எல்லையில் உலங்கு வானூர்தி நிலையம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றை சீனா அமைத்து வருகின்றமை தொடர்பில் பிரதமர் மோடி ஏன் பேசவில்லையென, இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

சிக்மகளூர் தொகுதியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய ராகுல் மேற்படி தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ராகுல்,

“பிரதமர் மோடி, மக்கள் முன் பேசுகையில் ஊழல் குறித்து பேசுகின்றார். ஆனால் பா.ஜ.க.வை சேர்ந்த  ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றவர்கள் பலர் அவருடன் ஒரே மேடையில் அமர்ந்துள்ளனர்.

கடந்த 1978ஆம் ஆண்டு எனது பாட்டி இந்திரா காந்திக்கு மகத்தான ஆதரவு வழங்கி வெற்றி பெறச் செய்ததை போன்று, எனக்கும் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்யுங்கள்” என குறித்த கூட்டத்தில் ராகுல்காந்தி தெரிவித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg