Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய இளம் அதிரடிப் புயலுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!

In இந்தியா
Updated: 11:06 GMT, Mar 22, 2018 | Published: 05:01 GMT, Mar 22, 2018 |
0 Comments
1417
This post was written by : Puvanes

பாரதத்தின் முதல் சட்ட அமைச்சர் அம்பேர்கர் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தினை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்திய அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது.

அண்மையில், ஹர்திக் பாண்ட்யா அம்பேத்கரை விமர்சிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த விடயம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனால் டி.ஆர் மேவால் என்பவர் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோத்பூர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

‘சட்ட மேதையான அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையிலும், பாரத அரசியல் அமைப்பினை அவமதிக்கும் வகையிலும் மாத்திரமல்லாது இனங்களில் உணர்வுகளை காயப்படுத்தும் வகையிலும் ஹர்திக் பாண்ட்யாவின் கருத்து அமைந்துள்ளது. இதனால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என குறித்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து குறித்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், ஹர்திக் பாண்ட்யா மீது முறைப்பாடு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்கு தொடரப்படும் சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg