Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பி.எஸ்.எல் ரி-ருவென்ரி தொடரில் வாகை சூடப்போவது யார்?

In கிாிக்கட்
Updated: 07:23 GMT, Mar 22, 2018 | Published: 07:23 GMT, Mar 22, 2018 |
0 Comments
1156
This post was written by : Anojkiyan

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-ருவென்ரி தொடரின் இறுதிபோட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காரச்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இறுதிபோட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும், டேரன் ஷமி தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

நடப்பு தொடரை பொறுத்தவரை, இஸ்லாமாபாத் யுனைடெட் அணி விளையாடிய பத்து போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதேவேளை பெஷாவர் ஸால்மி அணி, பத்து போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில், பாபர் அசாம், இயான் மோர்கன், கொலின் இங்ரம், சயிட் அப்ரிடி போன்ற துடுப்பாட்ட வீரர்களும், மொஹட் இர்பான், உஸ்மான் கான், மொஹமட் ஆமிர், டைமல் மில்ஸ் போன்ற பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

பெஷாவர் ஸால்மி அணியில், கம்ரன் அக்மல், ஹென்ரி பிளெட்சர், மொஹமட் ஹபீஸ், டேரன் ஷமி போன்ற துடுப்பாட்ட வீரர்களும், கிறிஸ் ஜோர்தான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ் போன்ற பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

இவ் இரு அணிகளையும் பொறுத்தவரை இரு அணிகளும் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சமபலம் பொருந்திய அணிகள் என்பதால் இறுதிபோட்டியில் சுவாரஸ்யத்திற்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg