Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூஸிலாந்துக்கு ஒபாமா விஜயம்: பலத்த வரவேற்பு

In
Updated: 07:43 GMT, Mar 22, 2018 | Published: 07:43 GMT, Mar 22, 2018 |
0 Comments
1117
This post was written by : Suganthini

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா நியூஸிலாந்துக்கு விஜயம் செய்துள்ள நிலையில் காலநிலை மாற்றம் உட்பட பல விடயங்களில் கவனஞ்செலுத்தவுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

நியூஸிலாந்துக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு, பழங்குடியின மக்களான மாவோரி மக்கள் பலத்த வரவேற்பளித்துள்ளனர். ஒக்லான்டிலுள்ள அரசாங்க இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வின்போதே, ஒபாமாவுக்கு வரவேற்பளித்துள்ளனர்.

இதேவேளை, நியூஸிலாந்துப் பிரதமர் ஜஸின்டா ஆர்டெர்னை (Jacinda Ardern) சந்திக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, காலநிலை மாற்றம் உட்பட பல விடயங்களில் கவனஞ்செலுத்தவுள்ளார்.

மேலும், நியூஸிலாந்துக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு ஒபாமா, நாளை அவுஸ்ரேலியாவுக்கு பயணிக்கவுள்ளதாகவும், அந்த ஊடகம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg