Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

58 ஓட்டங்களுக்கு சுருண்டது இங்கிலாந்து: முதல் போட்டியிலேயே மோசமான சாதனை

In கிாிக்கட்
Updated: 09:36 GMT, Mar 22, 2018 | Published: 08:02 GMT, Mar 22, 2018 |
0 Comments
1413
This post was written by : Anojkiyan

நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி வெறும் 58 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது.

இந்த ஓட்ட எண்ணிக்கையானது பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், முதல் இன்னிங்ஸிற்காக குவிக்கப்பட்ட ஆகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும். அத்தோடு, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 35வது ஆகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.

இதற்கு முன்னதாக அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 45 ஓட்டங்களுக்கு சுருண்டதே இங்கிலாந்தின் மோசமான சாதனையாகும்.

இதேவேளை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், இங்கிலாந்து அணிக்கெதிராக நியூசிலாந்து அணி 26 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டதே ஆகக் குறைந்த டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்லாந்தில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், தற்போது நியூசிலாந்து அணி, தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg