Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகக்கிண்ண தொடரில் விளையாட சிம்பாப்வே அணிக்கு வாய்ப்பு!

In கிாிக்கட்
Updated: 09:55 GMT, Mar 22, 2018 | Published: 09:09 GMT, Mar 22, 2018 |
0 Comments
1588
This post was written by : Anojkiyan

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கெதிரான போட்டியில், வெற்றிபெற்றால் உலகக்கிண்ண தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை சிம்பாப்வே அணி பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்தில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், மீதமுள்ள ஐந்து அணிகளில் ஒரு அணிக்கு மட்டுமே உலகக்கிண்ண தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

ஆகையால் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றுவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கெதிரான போட்டியில், சிம்பாப்வே அணி வெற்றிபெற்றால் உலகக்கிண்ண தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெறும்.

இல்லையெனில், நாளை நடைபெறும் ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி, உலகக்கிண்ண தொடருக்கு முன்னேறும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg