Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை: யு.பி.சிங்

In இந்தியா
Updated: 10:25 GMT, Mar 22, 2018 | Published: 09:30 GMT, Mar 22, 2018 |
0 Comments
1083
This post was written by : Kemasiya

எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வாய்ப்பில்லை என மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்துரைத்த யு.பி.சிங் மேற்படி கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் அமைக்க வாய்ப்பில்லை. இது தொடர்பில் ஏற்கனவே இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் எந்தவொரு இடத்திலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் எனக் கூறவில்லை.

மேலாண்மை வாரியம் தொடர்பில் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றே கூறியுள்ளது. அதை எப்படி செயற்படுத்துவது என்பது தொடர்பில் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது.

எனவே குறித்த விடயத்தில் அவசரப்பட முடியாது. சம்மந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சரியான தீர்வாக அமையும் திட்டம் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கையுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க வேண்டும். குறித்த விடயத்தில் சாதகமான பதிலை மத்திய அரசு கூறவேண்டும் எனக் கோரி அ.தி.மு.க. அமைச்சர்கள் நடாளுமன்றில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg